லக்னௌ: உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்ற விழா ஒன்றில், அரங்கத்தின் கழிவறையிலும் காவி டைல்ஸ்கள் ஒட்டப்பட்ட விவகாரம் தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேச முதல்வராக பாஜகவின் யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றதிலிருந்து அம்மாநிலத்தில் எங்கும் காவி, எதிலும் காவி என்னும் போக்கே மேலோங்கி காணப்படுகிறது. குறிப்பாக அரசு அலுவலங்கள், புதிய கட்டிடங்கள் என அனைத்திற்கும் காவி நிறத்தை பூசி வந்த பாஜக வினர், கடந்த மாதம் அம்பேத்கர் சிலை ஒன்றுக்கு கூட காவி நிறத்தை பூசிய விவகாரம் பெரும் சர்சையைக் கிளப்பியது. பின்னர் சிலைக்கு மீண்டும் நீல நிறமே பூசப்பட்டது. பொதுவாக உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் காவி நிறம் மேலோங்கி காணப்படுவது என்பது இயல்பான ஒன்றாகும் .
இந்நிலையில் யோகி ஆதித்யநாத் பங்கேற்ற விழா ஒன்றில், அரங்கத்தின் கழிவறையிலும் காவி டைல்ஸ்கள் ஒட்டப்பட்ட விவகாரம் தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அங்குள்ள புகழ்பெற்ற 'ரஷ்கான்' அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமை தாங்கினார். அவரது வருகையினை ஒட்டி விழா மேடை, தோரணங்கள், திரைச்சீலை என எல்லாமே காவி நிறமாக காட்சியளித்தது.
அதன் உச்சகட்டமாக அரங்கில் உள்ள கழிவறை சுவர்களில் ஏற்கனவே இருந்த வெள்ளை டைல்ஸ் ஓடுகள் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக காவி நிற டைல்ஸ் ஓடுகள் பதிக்கப்பட்டன. இவ்வாறு முதலவர் பங்கேற்கும் விழா அரங்கின் கழிவறை சுவர்களில் கூட காவி நிற ஓடுகள் பதிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை மாநிலத்தில் உண்டாக்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

Strong Room-ல் வாக்குப்பதிவு எந்திரங்கள்! சீல் வைத்துப் பாதுகாப்பு!

வாக்குப்பதிவு சதவிகிதம்! வியப்பதற்கு ஒன்றுமில்லை!
அதிக கவனம்பெறும் தேனி வாக்குச்சாவடி! 5 பேரில் வாக்களித்தது எத்தனை பேர்?

வார பலன்கள் (ஏப். 24 - 30) - மீனம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


