மணிப்பூர் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம் பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

2019 மக்களவைத் தேர்தல்: பாஜகவுக்கு எதிராக அமைந்தது முதல் கூட்டணி

கர்நாடகாவில் பாஜகவை ஆட்சிக்கு வர விடாமல் இருக்க அமைக்கப்பட்ட காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி, தற்போது 2019ல் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கும் தொடர உள்ளது.

News image
Updated On :2 ஜூன் 2018, 5:30 am

பெங்களூர்: கர்நாடகாவில் பாஜகவை ஆட்சிக்கு வர விடாமல் இருக்க அமைக்கப்பட்ட காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி, தற்போது 2019ல் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கும் தொடர உள்ளது.

மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை பாஜகவுக்கு எதிராக அமைக்கப்பட்ட முதல் கூட்டணியாக காங்கிரஸ் - மஜத கூட்டணி அமைந்துள்ளது.

இதே போல, அந்தந்த மாநிலங்களில் உள்ள மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, பாஜகவை பின்னுக்குத் தள்ள காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.  அந்த வகையில் ஆந்திராவில் தெலுங்கு தேசம், தமிழகத்தில் திமுக போல டிஆர்எஸ், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

பல மாநிலங்களுக்கு எதிராக பாஜக எடுத்த கொள்கை முடிவுகளால், தற்போது பாஜகவுக்கு எதிரான அலை வீசத் தொடங்கியுள்ளது. குறிப்பாக தென்மாநிலங்களில். அந்த வகையில், வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்று திரட்டி கூட்டணி அமைத்து வெற்றிக் கனியைப் பறிக்க காங்கிரஸ் தேர்தல் களம் அமைத்து காய் நகர்த்தி வருகிறது.

இதற்காக, மாநில கட்சிகளுக்கு காங்கிரஸ் பகிரங்க அழைப்பையும் விடுத்துள்ளது. 

கர்நாடகாவில், தேவேகௌடவின் அரசியல் பலத்தால் மேலும் சில மாநில கட்சிகளையும், தங்கள் கூட்டணியில் கொண்டு வர முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மூன்றாவது கட்சி உருவாகும் வாய்ப்புக் குறையும் என்று கூறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.