மணிப்பூர் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம் பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

மானிய சிலிண்டர் விலை ரூ.2.34ம், மானியமில்லா சிலிண்டர் விலை ரூ.48ம் உயர்வு

10 மாநிலங்களில் உள்ள 9 சட்டப்பேரவை மற்றும் 4 மக்களவைக்கான இடைத்தேர்தல்கள் முடிந்து நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன.

News image
Updated On :1 ஜூன் 2018, 5:47 am


புது தில்லி: 10 மாநிலங்களில் உள்ள 9 சட்டப்பேரவை மற்றும் 4 மக்களவைக்கான இடைத்தேர்தல்கள் முடிந்து நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன.

பொதுவாக தேர்தல்கள் முடிந்ததும் ஏதாவது ஒன்றின் விலையை உயர்த்துவதுதானே ஜனநாயக நடைமுறை.

அந்த வகையில், தற்போது மானியமில்லா எரிவாயு சிலிண்டர்களின் விலையில் ரூ.48ம், மானிய சிலிண்டர்களின் விலையில் ரூ.2.34ம் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதனால், மானிய சிலிண்டர்கள் விலை தில்லியில் ரூ.493.55ம், மானியமில்லா சிலிண்டர் விலை ரூ.698.50 ஆகவும் உயர்ந்துள்ளது.

இதே போல, மானிய சிலிண்டர் விலை கொல்கட்டாவில் ரூ.496.65 ஆகவும், மும்பையில் ரூ.491.31 ஆகவும், சென்னையில் ரூ.481.84 ஆகவும் உயர்ந்துள்ளது.

மானியமில்லா சிலிண்டர் விலை கொல்கட்டாவில் ரூ.723.50 ஆகவும், மும்பையில் ரூ.671.50 ஆகவும், சென்னையில் ரூ.712.50 ஆகவும் உயர்ந்துள்ளது.

ஏற்கனவே, பெட்ரோல், டீசல் விலைகள் தினந்தோறும் உயர்ந்து வருவதால், பொருளாதார சிக்கலில் சிக்கித் தவித்து வரும் சாமானிய மக்களுக்கு, சிலிண்டர் எரிவாயு உருளை விலையும் உயர்த்தப்பட்டிருப்பது மிகப்பெரிய இன்னலை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.