அலிராஜ்புர்: பாகிஸ்தான் சர்வாதிகாரி ஜியா உல் ஹக்குடன், பிரதமர் மோடியை ஒப்பிட்டு காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் பேசியதால் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்புரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அம்மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக்விஜய் சிங் வந்திருந்தார். அப்பொழுது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
அடிப்படைவாதம் எப்பொழுது தீவிரவாதத்திற்கு இட்டுச் செல்லும். பாகிஸ்தானில் ஜியா உல் ஹக்கால் ஊக்குவிக்கப்பட்ட மத அடிப்படைவதாமானது, அங்கு தீவிரவாதத்தினை பெருகச் செய்தது.இந்தியாவில் ஆளும் கட்சியினால் மத அடிப்படைவாதமானது 'ஹிந்துத்வா' என்ற பெயரில் முன்னிலைப்படுத்தப்படுகிறது. இதுவும் அதே போன்றதொரு ஆபத்தான போக்குதான்.
பாகிஸ்தானில் ஜியா உல் ஹக் 'ஜமாத் இ இஸ்லாமி’ போன்ற அமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கினார். அவர் தலிபான் போன்ற தீவிர அடிப்படைவாத அமைப்புகளை ஆதரிக்கத் துவங்கியதும், இந்தியாவை விட பாகிஸ்தானில் அதிக அளவிலான தீவிரவாத செயல்கள் நடைபெறத் துவங்கின. பாகிஸ்தானில் அதிக குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இதற்கு பின்னுள்ளவர்கள் யார்? அவர்கள் யாரும் வெளி நாட்டவர்கள் இல்லை; பாகிஸ்தானியர்கள்தான். இறந்தது யார்? இஸ்லாமியர்கள்தான்; வேறு ஒருவரும் இல்லை.
ஆப்கானிஸ்தானில் என்ன நடந்தது? அது சித்தாத்தங்களுக்கு இடையேயான சண்டை. எங்கெல்லாம் இத்தகைய சித்தாத்தங்களும், சகிப்புத்தன்மை அற்ற நிலையும் காணப்படுகிறதோ, அங்கு தீவிரவாதம் உருப்பெறும். சகிப்புத்தன்மை அற்ற மத ஆதரவானது என்றுமே தீவிரவாதத்திற்கு வழிகோலும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் ராணுவ ஜெனரலாக இருந்து அதிரடி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய ஜியா உல் ஹக், 1978 முதல் 1988 வரை 10 ஆண்டுகள் அந்நாட்டின் அதிபராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தலைவர்கள், திரைப் பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்
சூரியின் மண்டாடி படப்பிடிப்பு நிறைவு! சிறப்பு விடியோ!

தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்

சாய் சுதர்சன் அதிரடி சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


