பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

எங்களால்தான் மோடி பிரதமராக முடிந்தது: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புது விளக்கம்

தேநீர் விற்றவர் தற்போது பிரதமராகியுள்ளார் என்றால், அது காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஜனநாயகம் மிக நல்ல முறையில் காப்பாற்றப்பட்டுள்ளதையே காட்டுகிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். 

News image
Updated On :9 ஜூலை 2018, 5:11 am


மும்பை: தேநீர் விற்றவர் தற்போது பிரதமராகியுள்ளார் என்றால், அது காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஜனநாயகம் மிக நல்ல முறையில் காப்பாற்றப்பட்டுள்ளதையே காட்டுகிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். 

மகாராஷ்டிராவுக்கான காங்கிரஸ் பொதுச் செயலர் பொறுப்பு வகித்து வரும் மல்லிகார்ஜுன கார்கே, கட்சித் தொண்டர்களிடையே பேசுகையில் இவ்வாறு கூறினார்.

மோடி எப்போது  பேசினாலும் அவர் மட்டுமே பேசுவார்கள். வேறு யாரையும் பேச அவர் அனுமதிப்பதில்லை. எங்களைப் பார்த்து அவர் கேட்கிறார் காங்கிரஸ் கடந்த 70 ஆண்டுகாலமாக என்ன செய்தது என்று. நான் கேட்கிறேன், நாங்கள் எதையுமே செய்யவில்லை என்றால், மோடி தற்போது எங்கே அமர்ந்துகொண்டிருப்பார்? ஒரு தேநீர் வியாபாரி பிரதமராக முடிகிறது என்றால், காங்கிரஸ் கட்சி, ஜனநாயகத்தைக் காப்பாற்றியுள்ளதே காரணம் என்று கார்கே கூறியுள்ளார்.

ஒவ்வொரு நாளும் ரயில்வே மேம்பாலங்கள் சரிவரும், ரயில்கள் தடம்புரள்வதுமாக இருக்கும் போது புல்லட் ரயில் எப்படி வரும் என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும். காங்கிரஸ் கட்சியை பெயில் காடி (ஜாமீன் வண்டி) என்று வர்ணிக்கும் மோடி, முதலில் தண்டவாளங்களை பராமரிக்க வேண்டும் என்று காட்டமாகக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.