/

மோசடியாளர்களுக்கு வரம்பை மீறி கடன் கொடுத்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகள் கைது

மோசடியாளர்கள் என ஆர்பிஐ முத்திரைக் குத்திய பிறகும் அளவுக்கு அதிகமாக கடன் கொடுத்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகளை கைது செய்தது சிபிஐ.

News image

கோப்புப்படம்

Updated On :7 ஜூலை 2018, 5:41 am

மோசடியாளர்கள் என ஆர்பிஐ முத்திரைக் குத்திய பிறகும் அளவுக்கு அதிகமாக கடன் கொடுத்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகளை கைது செய்தது சிபிஐ.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் பல்வேறு வங்கிகளில் கடன் பெற்று திரும்ப செலுத்தாத மொத்தத் தொகை ரூ.2,654 கோடியாகும்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த சிபிஐ, கடந்த ஏப்ரல் மாதம் பல்வேறு சோதனைகளை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக தனியார் நிறுவனத்தின் நிர்வாகிகளை கைது செய்ததோடு, இவர்கள் மோசடியாளர்கள் என ஆர்பிஐ அறிவித்த பிறகும், உச்ச வரம்பையும் தாண்டி தங்களது பரிந்துரையின் பேரில் அளவுக்கு அதிகமாக கடன் கொடுத்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகளை சிபிஐ நேற்று இரவு கைது செய்துள்ளது.

வங்கி விதிகளை மீறி இவர்கள் கடன் கொடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே சிபிஐ கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.