பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பிகார் பள்ளியில் நடந்த அவலம்.. தலைப்பு வைக்க வார்த்தைகளே இல்லை

பிகாரின் சரண் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவியை கடந்த 7 மாதங்களாக 15 மாணவர்களும், 3 ஆசிரியர்களும், பள்ளி வளாகத்திலேயே பாலியல் துன்புறுத்தல் செய்து வந்த அவலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

News image
Updated On :7 ஜூலை 2018, 6:47 am

பாட்னா: பிகாரின் சரண் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவியை கடந்த 7 மாதங்களாக 15 மாணவர்களும், 3 ஆசிரியர்களும், பள்ளி வளாகத்திலேயே பாலியல் துன்புறுத்தல் செய்து வந்த அவலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பள்ளியில் நடக்கும் கொடுமையைத்  தாங்க முடியாத 14 வயது மாணவி, தனது தந்தையுடன் நேற்று காவல்நிலையத்தை அணுகி புகார் அளித்துள்ளார். இதையடுத்த 15 மாணவர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் 2 உதவி ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்குப் பதிவு செய்து, பள்ளியில் நேரடி விசாரணை நடத்தப்பட்டிருக்கும் நிலையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவது என்னவென்றால், பள்ளி தலைமை ஆசிரியர் உதய் குமார் சிங், ஆசிரியர் பாலாஜி மற்றும் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 குற்றவாளிகளும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை தேடி வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம், அந்த மாணவியை 5 மாணவர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதனை ஒரு மாணவன் படம்பிடித்துள்ளான். இதனை வெளியே சொன்னால் விடியோவை வெளியிட்டுவிடுவோம் என்று கூறி மிரட்டிய மாணவர்கள், தொடர்ந்து அப்பெண்ணை பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.

இந்த சம்பவம் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு தெரிய வந்ததை அடுத்து, அவரும், மேலும் 2 ஆசிரியர்களும் மாணவர்களுடன் சேர்ந்து கடந்த 7 மாதகாலமாக மாணவியை பலாத்காரம் செய்து வந்துள்ளனர். 

இது குறித்த பிகாரில் இருந்து வெளியூர் சென்று பணியாற்றி வந்த தனது தந்தையிடம் அம்மாணவி கூறியதை அடுத்து, அவர்கள் பள்ளிக்குச் சென்று வாக்குவாதம் செய்துள்ளனர். அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து, காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.