மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்!முதல்வா் நாளை குமரி வருகை!ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
/

மும்பை கனமழை எதிரொலி: மாநகராட்சி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் விமர்சனம்

மும்பையில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு மாநகராட்சி தான் காரணம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் விமர்சித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:07 pm

ANI

மும்பையில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு மாநகராட்சி தான் காரணம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் விமர்சித்துள்ளார்.

மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அந்தேரி மேற்கில் அமைந்துள்ள பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில், சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாலங்கள் விழுகிறது. இதில் மாநகராட்சியும் சேர்ந்து வீழ்ந்துள்ளது. மும்பை மக்களின் மீது தான் எனது கவனம் உள்ளது. நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார். இதில், மஹாராஷ்டிராவில் ஆளும் பாஜக அரசு மற்றும் மும்பை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டிக்கும் விதமாக அவர் இப்பதிவை வெளியிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.