/

ஆட்சி அமைக்க பிடிபி உடன் கூட்டணி சேர வேண்டிய அவசியம் காங்கிரஸுக்கு இல்லை: குலாம் நபி ஆசாத்

ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி அமைக்க பிடிபி அல்லது வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி சேர வேண்டிய அவசியம் காங்கிரஸுக்கு இல்லை என மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :3 ஜூலை 2018, 10:59 am

ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி அமைக்க பிடிபி அல்லது வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி சேர வேண்டிய அவசியம் காங்கிரஸுக்கு இல்லை என மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்த கூட்டம் ஸ்ரீநகரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கலந்துகொண்டார். மேலும் ஜம்மு-காஷ்மீர் பொறுப்பாளர் அம்பிகா சோனி, மாநிலத் தலைவர் ஜி.ஏ.மிர் ஆகியோரும் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த குலாம் நபி ஆசாத், ஜம்மு-காஷ்மீரில் பிடிபி கட்சியுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டிய எந்த நிர்பந்தமும் காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது. அதுபோன்ற ஒரு கேள்விக்கே இங்கு இடமில்லை என்றார்.

தற்போது ஆளுநர் ஆட்சி நடைபெற்று வரும் அம்மாநிலத்தில், தனிப்பெரும் கட்சியாக 28 சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் பிடிபி முதலிடத்தில் உள்ளது. பாஜக-வுக்கு 25 உறுப்பினர்கள் உள்ளனர். தேசிய காங்கிரஸுக்கு 15 மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு 12 பேரவை உறுப்பினர்கள் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.