முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தில்லியில் கடும் பனிமூட்டம்: 21 ரயில்கள் ரத்து, 55 ரயில்கள் தாமதம்

தலைநகர் தில்லியில் ஏற்பட்டுள்ள கடும் பனிமூட்டம் காரணமாக வெள்ளிக்கிழமை 21 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:05 pm

Raghavendran

தலைநகர் தில்லியில் கடந்த டிசம்பர் மாதம் முதல் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் அங்கு காற்று மாசு ஏற்பட்டுள்ள காரணத்தால் பகல் நேரங்களில் கூட வெளிச்சமின்மையுடன் காணப்படுகிறது.

மேலும் அங்கு சராசரியாக அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 5 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது. 

இந்த அடர் பனிமூட்டம் காரணமாக அங்கு மேசமான வானிலை நிலவுவதால் மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அதிகாலையிலும், மாலைப் பொழுதுகளிலும் குளிர் காற்று வீசி வருகிறது. இது பொதுமக்களின் இயல்பு வாழ்கையை பாதித்துள்ளது. 

இந்நிலையில், தலைநகர் தில்லியில் இருந்து இதர இடங்களுக்குச் செல்லும் ரயில் சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடும் பனிமூட்டம் காரணமாக வெள்ளிக்கிழமை மட்டும் 21 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

அதுமட்டுமல்லாமல் 55 ரயில்கள் தாமதமாக வந்தடைந்துள்ளன. 23 ரயில்களின் பயண நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.