புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

கேரளாவில் கொடூரம்: தனது 14 வயது மகனை எரித்துக் கொன்ற தாய்! 

கேரளாவில் தனது 14 வயது மகனை தாய் ஒருவரே எரித்துக் கொன்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.  

News image
Updated On :19 ஜனவரி 2018, 9:24 am

கொல்லம்: கேரளாவில் தனது 14 வயது மகனை தாய் ஒருவரே எரித்துக் கொன்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.  

இது தொடர்பாக கொல்லம் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீனிவாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தினைச் சேர்ந்த சிறுவன் ஜித்து (14). இவனைக் கடந்த இரு நாட்களாக காணவில்லையென்று அவனது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தனர்.  இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரனை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் ஜித்துவின் வீட்டுக்கு அருகே உள்ள வாழைத் தோட்டம் ஒன்றில் வெள்ளியன்று காலை வெட்டுப்பட்டு எரிந்த நிலையில் அவனது உடல் மீட்கப்பட்டது. பின்னர் தொடர்ந்த போலீசாரின் தீவிர விசாரணையில் ஜித்துவின் தாயர் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களை கூறிக் கொண்டே இருந்ததால், சந்தேகமடைந்த போலீசார், விசாரணையை தீவிரப்படுத்த, தான் செய்த் குற்றத்தினை ஜித்துவின் தாயார் ஒப்புக் கொண்டார்.

ஜித்துவினை வெட்டிக் கொன்ற அவர், பின்னர் அவனது உடலை எரித்து மீதங்களை வீட்டுக்கு அருகே உள்ள வாழைத் தோட்டம் ஒன்றில் புதைத்துள்ளார். பிறகு மறுநாள் ஒன்றும் தெரியாது போல தனது கணவருடன் காவல் நிலையம் சென்று, ஜித்துவினைக் காணவில்லை என்று போலீசில் புகார் செய்துள்ளார்.

கொலைக்கான காரணம் என்ன என்று தெரியாத நிலையில், தற்பொழுது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.