புது தில்லி: தகவல் தொழில்நுட்பம், ஸ்மார்ட்ஃபோன் போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியால் ஒவ்வொரு வசதி வாய்ப்புகளும் ஏற்படுவது போல இந்த ஆண்டு உணவுத் துறையில் ஒரு புதிய வாய்ப்பு உண்டானது.
இது நல்லதா? கெட்டதா? என்று புத்தாண்டுக்கு வேண்டுமென்றால் பட்டிமன்றம் வைத்துக் கொள்ளலாம். நமக்கு அந்த விவகாரம் தேவையில்லை.
அதாவது ஸ்விக்கி, உபெர் ஈட்ஸ், ஸோமாட்டோ போன்ற செயலிகளின் வருகையால் வீட்டில் இருந்து கொண்டே விரும்பிய உணவகங்களில் இருந்து விரும்பிய நேரத்தில் உணவை வாங்கி சாப்பிடும் வசதி ஏற்படுத்தப்பட்டது.
சரி.. இந்த ஆண்டு அதாவது 2018ல் இந்தியர்களால் அதிகளவில் ஆர்டர் செய்யப்பட்டு சுவைக்கப்பட்ட உணவு எது, எந்த வகையான உணவுகளை எல்லாம் இந்தியர்கள் அதிகம் விரும்பினார்கள் என்று ஒரு சின்ன அலசல்..
அதாவது, வெளிநாட்டு பாணியில் செயலிகள் மூலம் உணவை ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்டாலும், அதிக அளவில் இந்திய உணவுகளையே இந்தியர்கள் வாங்கி சாப்பிட்டுள்ளனர். அமெரிக்க, சீன, இத்தாலி என பல நாட்டு உணவுப் பொருட்கள் இந்தியாவுக்குள் இறக்குமதியாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் இந்திய உணவுப் பொருட்களுக்கு நிகராக இவை இடம்பிடிக்க முடியவில்லை. இதைத்தான் இந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
அதாவது ஹைதராபாத், தில்லி, சென்னை உள்ளிட்ட இந்தியாவின் மிகப்பெரிய நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், அதிகப்படியாக இந்திய உணவுகளே ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
பெங்களூரு, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட நகரங்களில் வாழும் மக்கள் ஆரோக்கியமான உணவுப் பொருட்களையே வாங்கி சாப்பிடுவதாகவும் தெரிய வந்துள்ளது.
அதாவது, 2017 டிசம்பர் முதல் 2018 நவம்பர் வரையிலான காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்தியர்கள் இன்னமும் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துகிறார்கள் என்றே தெரிய வந்துள்ளது.
தர்பூசணி, மொசாம்பி, அண்ணாசிப்பழம், ஆரஞ்சு போன்ற பழச்சாறுகள், உணவு செயலிகள் மூலம் அதிகளவில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. அகமதாபாத், சண்டிகர், தில்லி, லக்னௌ, மும்பை மற்றும் புனே போன்ற நகரங்களில் ரோஸ்டட் சிக்கன் மற்றும் ஃப்ரூட் சாலட்டுகள் அதிகளவில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்களை விட, வார நாட்களில் இந்தியர்கள் உடலுக்கு நன்மை தரும் உணவு பொருட்களையே அதிக அளவில் ஆர்டர் செய்து சாப்பிடுகிறார்கள்.
குளிர்பானங்களை விட, பழச்சாறுகளே 5 மடங்கு அதிகமாக இந்தியர்களால் வாங்கி பருகப்பட்டுள்ளது.
அசைவ உணவுகளை விட, சைவ உணவுகளே அதிக அளவில் ஆர்டர் செய்யப்பட்டிருப்பதும், சைவ உணவுகளை அதிகளவில் ஆர்டர் செய்த நகரங்களின் பட்டியலில் அகமதாபாத் முதல் இடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத்தைத் தொடர்ந்து பெங்களூருவாசிகள் கோழிக்கறி உணவுப் பொருட்களை அதிகளவில் சாப்பிட்டுள்ளனர்.
பண்டிகைக் காலங்களில் இதுபோன்று உணவுப் பொருட்களை செயலி மூலம் ஆர்டர் செய்து பெருவது அதிகரித்துள்ளதாகவும், விநாயகர் சதுர்த்தியின் போது லட்டு போன்ற இனிப்புகளும் அதிகளவில் ஆர்டர் செய்யப்பட்டதாகவும் கூறுகிறது இந்த ஆய்வு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது

30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள்: டிஆா்டிஓ தயாரிப்பு

இன்றைய ராசி பலன்கள் (26 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு நன்மை!

மேஷ ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


