டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

ராஜஸ்தான் முதல்வராகிறார் அஷோக் கெலாட்: இன்று மாலை அறிவிப்பு

ராஜஸ்தான் மாநில முதல்வர் போட்டியில் சச்சின் பைலட்டை பின்னுக்குத் தள்ளி பதவியைப் பிடிக்க உள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் அஷோக் கெலாட்.

News image
Updated On :13 டிசம்பர் 2018, 10:27 am


ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில முதல்வர் போட்டியில் சச்சின் பைலட்டை பின்னுக்குத் தள்ளி பதவியைப் பிடிக்க உள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் அஷோக் கெலாட்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மூத்தத் தலைவர்களுடனான சந்திப்பினை முடித்துவிட்ட நிலையில், இன்று மாலை ராஜஸ்தான் முதல்வர் தொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ளார். அப்போது, ராஜஸ்தான் மாநில முதல்வராக இரண்டு முறை பதவி வகித்த அஷோக் கெலாட் (67) புதிய முதல்வராக அறிவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

ராஜஸ்தான் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்த அஷோக் கெலாட்டும், சச்சின் பைலட்டும் ராகுல் காந்தியை சந்தித்தனர். அஷோக் கெலாட், ராகுலுடன் சந்திப்பை முடித்துக் கொண்டு ஜெய்ப்பூர் திரும்பிவிட்ட பிறகு, அவரை முதல்வராக தேர்வு செய்வதாக கட்சித் தலைமை முடிவு செய்தது.

ராஜஸ்தான் முதல்வர் தேர்வு குறித்து கட்சித் தலைமை இன்று மாலை அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.