ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் முதல்வராக பதவியேற்கப் போவது யார் என்பது குறித்து சஸ்பென்ஸ் தொடர்கிறது.
200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையின் 199 தொகுதிகளுக்கு கடந்த 7-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், ஆட்சி அமைக்க 101 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவுக்கு 73 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 6 இடங்களிலும், சுயேச்சை மற்றும் இதர கட்சிகள் 21 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. எனவே, ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. இந்த மாநிலத்தில் பாஜகவும், காங்கிரஸும் மாறிமாறி ஆட்சி அமைப்பது வழக்கமாக உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் முதல்வராக பதவியேற்கப் போவது யார் என்பது குறித்து முடிவு செய்யும், தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் புதன்கிழமையன்று ஜெய்ப்பூரில் நடைபெற்றது.
இதில் முதல்வர் பதவிக்கு முதன்மை போட்டியாளர்களான முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரும் ராகுல் காந்திக்கு நெருக்கனமானவருமான சச்சின் பைலட் இருவரும் தத்தமது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டனர்.
இவர்கள் இருவருக்குமே உறுப்பினர்களின் சரிசமமான ஆதரவு இருப்பதால், ஒருமனதாக முடிவு எடுத்து கட்சித் தலைமைக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
அதேபோல இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் மேலிடப் பார்வையாளரான வேணுகோபால் சம்மந்தப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக பேசி கருத்துக்களை கேட்டறிந்து உள்ளதாகவும், பின்னர் அதனைத் தொகுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அனுப்ப உள்ளதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராகுல் காந்தி ஓர் முடிவு எடுக்கும் பட்சத்தில் அடுத்த கூட்டமானது யார் முதல்வர் என்பதை அறிவிக்கும் விதமாக அமையும்.
அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு, கூட்டம் நடைபெற்ற இடத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது

30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள்: டிஆா்டிஓ தயாரிப்பு

இன்றைய ராசி பலன்கள் (26 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு நன்மை!

மேஷ ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


