கொச்சி: ஒருவேளை நீங்கள் கொச்சியில் இருந்தால் உபர் ஈட்ஸ், ஸ்விக்கி, ஸோமாட்டோ பணியாளர்கள், சுடச்சுட சுவையான உணவோடு உங்கள் வீட்டுக் கதவைத் தட்ட மாட்டார்கள்.
காரணம், செல்போன் செயலிகள் மூலம் வரும் ஆர்டர்களை ஏற்கப் போவதில்லை என்று கேரளாவில் உள்ள ஹோட்டல் மற்றும் உணவக நிர்வாகத்தினர் முடிவு செய்திருக்கிறார்கள்.
இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் என்னவென்றால், செயலி வழியாக உணவுப்பொருட்களை ஆர்டர் எடுத்து செய்யும் போது மிக சீக்கிரம் செய்து கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுவதால் உணவின் ருசியில் சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலையும், செயலிகளுக்காக உணவுப் பொருளின் விலையைக் குறைத்துக் கொடுக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. இதனால்தான் இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறுகிறார்கள்.
எது எப்படியிருந்தாலும் போகும் வழியில் இருக்கும் ஹோட்டலை மூடி விடுவார்களோ என்று ஓட வேண்டிய அவசியம் இல்லாமல் செயலி மூலம் உணவு வாங்கிக் கொண்டு இதுவரை நிம்மதியாக இருந்தவர்களுக்கு இந்த முடிவு நிச்சயம் வருத்தத்தையே அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்

ரூ. 56,900 சம்பளத்தில் சுங்கவரித் துறையில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

ஈரானில் மற்றொரு இஸ்ரேலிய உளவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

வருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


