கவுஹாத்தி: கிறிஸ்துவர்கள் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய நாகலாந்து மாநிலத்தில் எழுந்த கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி ரகசியமாகக் கரைக்கப்பட்டது.
உடல்நலக் குறைவின் காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான வாஜ்பாய் கடந்த 16-ந்தேதி மாலை காலமானார். மறுநாள் அவரது உடலானது தில்லியில் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யபட்டது
இதனைத் தொடர்ந்து அவரது அஸ்தியினை நாடு முழுவதும் உள்ள ஆறுகளில் கரைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்காக தனியான நிகழ்வு ஒன்றில் பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர்கள் ஒவ்வொருவரிடமும் வாஜ்பாயின் அஸ்தி அடங்கிய கலசம் வழங்கப்பட்டது
இந்நிலையில் கிறிஸ்துவர்கள் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய நாகலாந்து மாநிலத்தில் எழுந்த கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி ரகசியமாகக் கரைக்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.
நாகாலாந்து பழங்குடிகள் கூட்டமைப்புகள், எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் கிறிஸ்துவ தேவாலயத் தலைமை ஆகிய மூன்று தரப்பிலிருந்தும், இந்த சடங்கானது நமது நிலத்திற்கு ‘அந்நியமான ஒன்று’ என க் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
முன்னதாக நாகாலாந்து பழங்குடிகள் கூட்டமைப்புகளின் தலைமை அமைப்பான லோதா ஹோஹோ சார்பில் கூறுகையில், ‘ஆறுகளில் அஸ்தியைக் கரைப்பது என்பது கலாச்சாரப் பழக்கமோ அல்லது மத நம்பிக்கையோ கிடையாது. இதன் காரணமாக நாகர்களின் தனிப்பட்ட கலாச்சாரத்தினை எந்த விதத்திலும் நீர்த்துப் போகச் செய்யக் கூடாது’ என்று தெரிவிக்கப்பட்டது.
இத்தகைய எதிர்ப்புகளின் காரணமாக வாஜ்பாய் அஸ்தியானது முந்தைய திட்டப்படி டோயங் நதியில் ஒகா மாவட்டத்தில் கரைப்பதற்குப் பதிலாக, திமாபூர் மாவட்டத்தில் கரைக்கப்பட்டது.இது தொடர்பாக மாநில பாஜக தலைவர் டெம்ஜென் லோங்குமேர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வாஜ்பாயின் அஸ்தியானது திட்டமிடப்படி முறையாக யாருடைய நம்பிக்கையையும் காயப்படுத்தாமல் நதியில் கரைக்கப்பட்டது. .
இங்குள்ளவர்கள் உண்மை எதுவென்று தெரியாமல் சிறிய விஷயத்தினை பெரிதாக மாற்றுகிறார்கள். இது மதம் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை; மாறாக தேசிய அளவிலான விஷயம். ஒரு மாபெரும் மனிதர் தொடர்பான விஷயம்.
எனது தலைமையில் நாகாலாந்து பாஜகவின் சிறுபான்மையினர் பிரிவானது அஸ்தியை கரைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டது. கிறிஸ்துவர்களான நாங்கள் பிரார்த்தனை செய்தோம். மத குருக்கள் அவர்களது கடமையைச் செய்தனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆனாலும் அவர் அஸ்தி கரைக்கப்பட்ட இடம் எது என்பதனைக் கூற மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியா - அமெரிக்கா வா்த்தக பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம்: மத்திய அரசு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜூன் 19-க்கு ஒத்திவைப்பு

கிணற்றில் குளித்த இளைஞா் வலிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு

எல்ஆா்ஜி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு 2 அடுக்கு பாதுகாப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


