டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஒரு மாநிலத்தின் முதல்வருக்காக கோயில் கட்டும் திருநங்கைகள்

ஆந்திர மாநில முதல்வராக இருக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கு கோயில் கட்ட முடிவு செய்திருக்கும் திருநங்கைகள், கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டி, கட்டுமானப் பணிகளை தொடங்கியுள்ளனர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:49 pm

ENS


கர்னூல்: ஆந்திர மாநில முதல்வராக இருக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கு கோயில் கட்ட முடிவு செய்திருக்கும் திருநங்கைகள், கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டி, கட்டுமானப் பணிகளை தொடங்கியுள்ளனர்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கோயில் கட்டி, அதில், அவரது வெள்ளி உருவச் சிலையை வைத்து வழிபட முடிவு செய்யப்பட்டுள்ளது.

சமந்தா ஹிஜ்ரஸ் ஹக்குலா ஐக்கிய போராட்ட வேதிகா அமைப்பினர் நாண்டியால் பகுதியில் இந்த கோயிலை எழுப்ப உள்ளனர். உயிரோடு இருக்கும் ஒரு அரசியல் தலைவருக்காக ஆந்திராவில் கோயில் கட்டப்பட உள்ளது.

கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் பூமா அகிலா பிரியா, மாவட்ட ஆட்சியர் சத்யநாராயணா ஆகியோரும் பங்கேற்றனர்.

ஆந்திராவில் வாழும் திருநங்கைகளின் வாழ்க்கை மேம்பட, திருநங்கைகளுக்கான ஓய்வூதிய திட்டம், இலவச வீடு மற்றும் இதர பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த அளவுக்கு திருநங்கைகளுக்காக எந்த தலைவரும் சேவை செய்ததில்லை. அதனால், சந்திரபாபு நாயுடுவுக்கு சுமார் ரூ.30 லட்சம் மதிப்பில் கோயில் கட்ட திட்டமிட்டுள்ளோம். எங்கள் தெய்வம் சந்திரபாபுதான் என்று உணர்ச்சிப் பொங்கக் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.