தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சிறுமியை திருமணம் செய்து கொடுக்க மறுத்த குடும்பத்தையே கொன்று குவித்த கொடூரன்

திருமணமான நபர் ஒருவர், தான் விரும்பிய சிறுமியை, இரண்டாவது திருமணம் செய்து கொடுக்க மறுத்த குடும்பத்தை, கொன்று குவித்த சம்பவம் ஜார்க்கண்டில் நடந்துள்ளது.

News image
Updated On :3 ஏப்ரல் 2018, 10:08 am


பாட்னா: திருமணமான நபர் ஒருவர், தான் விரும்பிய சிறுமியை, இரண்டாவது திருமணம் செய்து கொடுக்க மறுத்த குடும்பத்தை, கொன்று குவித்த சம்பவம் ஜார்க்கண்டில் நடந்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பம் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கியக் குற்றவாளி டோபாய் பொய்பாய் திங்களன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

துளசைன் கிராமத்தைச் சேர்ந்த டோபாய், அதே கிராமத்தைச் சேர்ந்த ராம் சிங் சிர்கா, அவரது மனைவி, இரண்டு மகன்கள், 17 வயது மகள் முகி சிர்கா ஆகியோரை வெட்டிக் கொன்றதாகக் கைது செய்யப்பட்டார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

மார்ச் 15ம் தேதி சிர்கா குடும்பத்தினர் காணாமல் போனதாக கிராம மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், மார்ச் 27ம் தேதி ராம் சிங் சிர்காவின் தலையில்லாத உடல் மட்டும் வனப்பகுதிக்கு அருகே மீட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மோப்ப நாய் உதவியோடு தேடியபோது, மிகவும் அழுகிய நிலையில் காணப்பட்ட 4 பேரின் உடல்களை காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியதை அடுத்தே கொலைச் சம்பவம் வெளி உலகுக்கு தெரிய வந்தது.

30 வயதாகும் போய்பாய், தனது 8 கூட்டாளிகளுடன் சேர்ந்து மார்ச் 14ம் தேதி இரவு சிர்கா குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரையும் படுகொலை செய்துள்ளான்.

மார்ச் 14ம் தேதி போய்பாய் தனது கூட்டாளிகளுடன், சிர்காவின் வீட்டுக்கு வந்து அவரது மனைவி, மகள், இரண்டு மகன்களைக் கொன்றுள்ளான். அப்போது சிர்கா வீட்டில் இல்லை. கொலையாளிகள் சிர்கா வரும் வரை காத்திருந்து, அவர் வீட்டுக்குள் வந்ததும், அவரது தலையை வெட்டிக் கொன்றுள்ளனர். இந்த சம்பவத்தில் முக்கியக் குற்றவாளி போய்பாய் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், மேலும் 8 பேர் தேடப்பட்டு வருகிறார்கள்.

போய்பாய் - சிர்கா இடையே நிலத் தகராறு இருந்ததாகவும், போய்பாய், சிர்காவின் 17 வயது மகளை இரண்டாவது திருமணம் செய்து கொடுக்குமாறு மிரட்டியும், சிர்கா அதற்கு சம்மதம் தெரிவிக்காததால், இந்த படுகொலைகள் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.