கொச்சி: வெளிநாடுகளில் இருந்து சட்டத்துக்கு விரோதமாக தங்கம் கடத்துவோர் மேற்கொள்ளும் புதிய யுக்திகள், கேரள விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகளுக்கு கடும் சவாலாக உள்ளன.
சமீபத்தில் அப்படி ஒரு சவாலை சந்தித்த சுங்கத் துறை அதிகாரிகள், அந்த மஞ்சள் உலோகம், பேஸ்ட் வடிவில் பற்பசை பேக்குக்குள் வைத்துக் கொண்டு வரப்பட்டதைப் பார்த்து அதிர்ந்து போயினர்.
இதுபோன்று தங்கத்தை கூழாக்கிக் கொண்டு வரும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த தங்கக் கூழை, விமான நிலையத்தில் இருக்கும் மெட்டல் டிடெக்டர்கள் கண்டுபிடிக்க முடியாமல் போவதுதான் சோகம்.
நெடும்பசேரி விமான நிலையத்தில் தங்கக் கூழை பெல்டில் மறைத்துக் கொண்டு வந்த பயணி ஒருவர் பிடிபட்டார். அவரிடம் இருந்து 851 கிராம் எடையுள்ள தங்கக் கூழ் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 26.3 லட்சம்.
அதாவது, தங்கக் கூழை ஒரு பட்டைபோல மாற்றி, அதனை பேக் செய்து பயணி பெல்ட்டாகக் கட்டியிருந்தது சுங்கத் துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை அளித்தது. தங்கத்தை ரசாயனத்துடன் கலந்து கூழாக்குகிறார்கள். இது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.
பொதுவாக இதுபோன்ற தங்கக் கூழ்களை மெட்டல் டிடெக்டர்கள் கண்டுபிடிப்பதில்லை என்பதால், சுங்கத் துறை நுண்ணறிவுப் பிரிவினருக்கு வரும் தகவல்களின் அடிப்படையில் சிலரைப் பிடித்து தனித்தனியாக விசாரணை நடத்தி, சோதித்தே கண்டறிந்து வருகிறோம் என்று சுங்கத் துறை ஆணையர் சுமித் குமார் கூறியுள்ளார்.
உள்ளாடைகள், ஷாக்ஸ் போன்றவற்றில் கூட இதுபோன்று தங்கத்தை மறைத்துக் கொண்டு வருகிறார்கள். எலக்ட்ரானிக் பொருட்களுக்குள் இதுபோன்ற தங்கக் கூழ் எளிதாக ஒளிந்து கொள்ளுகிறது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு யுக்தியை கையாள்கிறார்கள். அதற்கேற்ப சுங்கத் துறை அதிகாரிகளும் அவற்றை கண்டறிந்து, கடத்தல் திட்டத்தை முறியடிக்கிறார்கள் என்றும் சுமித் கூறினார்.
இதுபோன்ற கடத்தல் தங்கம் குறித்து தகவல் அளிக்கும் பொதுமக்களுக்கு, பிடிபடும் தங்கத்தின் சந்தை மதிப்பில் 20 முதல் 30 சதவீதம் அளவுக்கு பரிசாக அளிக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளதாகக் கூறினார்.
2017-18ம் நிதியாண்டில் மட்டும் கேரளாவில் 87 கிலோ அதாவது 26.97 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்

Strong Room-ல் வாக்குப்பதிவு எந்திரங்கள்! சீல் வைத்துப் பாதுகாப்பு!

வாக்குப்பதிவு சதவிகிதம்! வியப்பதற்கு ஒன்றுமில்லை!
அதிக கவனம்பெறும் தேனி வாக்குச்சாவடி! 5 பேரில் வாக்களித்தது எத்தனை பேர்?
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


