ஹைதராபாத்: ஆந்திராவின் பிரபல பெண் செய்தி வாசிப்பாளர் ராதிகா ரெட்டி தனது அபார்ட்மெண்டின் ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆந்திராவில் V6 என்னும் செய்தித் தொலைக்காட்சி உள்ளது. அந்த தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் பெண் செய்தி வாசிப்பாளர் ராதிகா ரெட்டி. தனது நேர்த்தியான வாசிப்பு முறையின் காரணமாக அனைவரிடமும் பிரபலமானவர். 36 வயதாகும் இவர் ஆறு ஆண்டுகளுக்கு முன் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தனது தந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு 14 வயதில் மனவளர்ச்சி குன்றிய ஒரு மகனும் இருக்கிறார்.
இந்நிலையில் ஞாயிறு இரவு ராதிகா ரெட்டி ஹைதாராபாத்தின் மூஸாபேட் பகுதியில் உள்ள தனது ஸ்ரீவில்லா அபார்ட்மெண்ட்டின் ஐந்தாவது மாடியில் இருந்து, கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்துகொண்ட அவரது கைப்பையிலிருந்து தெலுங்கில் எழுதப்பட்ட கடிதம் ஒன்று மீட்கப்பட்டது. அதில் , 'என் மூளையே எனக்கு எதிரி; என் சாவுக்கு யாரும் காரணமில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்ததது.
ஞாயிறு இரவு பணியிலிருந்து அவர் வீட்டுக்கு திரும்பியதை அக்கம் பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் பார்த்துள்ளனர். வேகமாக படிகளில் ஏறியவர் தனது வீட்டிற்குப் போவதற்குப் பதிலாக, ஐந்தாவது மாடிக்குச் சென்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவரது தற்கொலைக்கு மன அழுத்தகம் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்

Strong Room-ல் வாக்குப்பதிவு எந்திரங்கள்! சீல் வைத்துப் பாதுகாப்பு!

வாக்குப்பதிவு சதவிகிதம்! வியப்பதற்கு ஒன்றுமில்லை!
அதிக கவனம்பெறும் தேனி வாக்குச்சாவடி! 5 பேரில் வாக்களித்தது எத்தனை பேர்?
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


