விஜயவாடா: ஆந்திர பிரதேசத்தின் புதிய தலைநகராக உருவாகவிருக்கும் அமராவதியில், முக்கிய கட்டிடங்களின் வடிவமைப்பு தொடர்பாக பாஹுபலி இயக்குனர் ராஜமவுலி ஆலோசனைகள் வழங்கவிருக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆந்திரா மாநிலமானது ஆந்திரா மற்றும் தெலுங்கானா என்று இரண்டாக பிரிக்கப்பட்ட பிறகு ஆந்திராவின் தலைநகராக 'அமராவதி என்ற புதிய நகரை நிர்மாணிப்பது என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்தார்.
இதற்காக இங்கிலாந்தின் தலைநகர் லண்டனைச் சேர்ந்த பாஸ்டர் ப்ளஸ் பார்ட்னர்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதற்கான அடிப்படைப் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் புதிதாக உருவாக்கப்படவுள்ள அமராவதி நகரத்தில் அமைக்கப்படவுள்ள கட்டடங்கள் யாவும் தெலுங்கு பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை பின்பற்றி அமைய வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு விரும்பினார்.
இதற்காக சமீபத்தில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற பாஹுபலி திரைப்படத்தில் தத்ரூபமாக பழங்கால கட்டடங்களை கணிப்பொறி நுட்பத்தில் உருவாக்கிய பிரபல இயக்குனர் ராஜமவுலியின் உதவியினைக் கோருவது என்று முடிவு செயப்பட்டது. இதற்காக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நாராயணா தலைமையில் உயர் அதிகாரிகள் ராஜமவுலியை கடந்த வாரம் சந்தித்துப் பேசினார்கள் அப்பொழுது அமராவதியில் புதிதாக அமையவுள்ள சட்டப்பேரவைக் கட்டடம் மற்றும் உயர் நீதிமன்ற கட்டட வடிவமைப்பு குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக ராஜமவுலி இன்று அமராவதியில் புதிய தலைநகரம் அமையவுள்ள இடத்திற்கு வந்தார். அங்கு புதிய சட்டப்பேரவைக் கட்டடம் மற்றும் உயர் நீதிமன்றம் அமையவுள்ள இடங்களைப் பார்வையிட்டார். பின்னர் அவர் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்துப் பேசினார். அவரிடம் கட்டட வடிவமைப்பு குறித்து ஆலோசனைகள் நடத்தினார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'அமராவதியில் உருவாக்கப்படவுள்ள கட்டடங்களின் வடிவமைப்பு மேம்பாடு தொடர்பாக தேவையான எல்லா உதவிகளையும் செய்ய உள்ளதாக தெரிவித்தார். அத்துடன் குறிப்பிட்ட பாஸ்டர் ப்ளஸ் பார்ட்னர்ஸ் கட்டுமான நிறுவனம் உருவாகியுள்ள வடிமைப்புகளை முழுக்க அறிந்த பின், அவர்களுடன் பேச உள்ளதாகவும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
அமெரிக்காவிலிருந்து வெளியேறும் இந்தியர்கள்! ஏன்?

ஆம்புலன்ஸில் சென்று வாக்களித்த உடல்நிலை சரியில்லாத முதியவா்

கரூரில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வேன்: எம்.ஆா். விஜயபாஸ்கா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


