பாட்னா: பிகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று திறந்து வைப்பதாக இருந்த நிலையில், கங்கை பாசன கால்வாய்த் திட்டச் சுவர் நேற்று உடைந்து கொண்டதால் திறப்பு விழா ரத்து செயப்பட்டது.
பிகார் மற்றும் அருகில் உள்ள ஜார்கண்ட் ஆகிய இரு மாநிலங்களில் உள்ள 22,658 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும் விதத்தில், இரு மாநிலங்களும் இணைந்து கங்கை பாசன கால்வாய்த் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.389.31 கோடியாகும்.
திட்டப்பணிகள் எல்லாம் முடிவடைந்த நிலையில் இன்று காலை பிகார் முதல்வர் நிதிஷ்குமார் திட்டத்தினை துவங்கி வைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தன. இந்நிலையில் நேற்று பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள படேஸ்வர்ஸ்தான் என்னும் இடத்தில் நதி நீரை அதற்குரிய குழாய்கள் வழியாக கால்வாய்க்குள் விடும் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இதில் சீறிப் பாய்ந்து வந்த கங்கை நதி நீரின் வேகம் தாளாமல் பக்கவாட்டு சுவர்கள் உடைந்தன.இதன் காரணமாக நீரானது கஹல்கோன் மற்றும் என்.டி.பி.சி பகுதிகளை சூழ்ந்தது. அங்கு இருந்த நீதிபதிகள் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகள் நீரில் மூழ்கின.
இதன் காரணமாக இன்று நடைபெறவிருந்த திறப்பு விழா நிகழ்வு ரத்து செய்யப்படுவதாக அரசு தரப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இது பிகார் அரசுக்கு ஒரு பெரும் தலைகுனிவாகக் கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (25.04.2026) -சிம்மம்
இன்றைய ராசி பலன் (25.04.2026) - துலாம்

குழப்பம் நீங்கும் மகர ராசிக்கு: தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (25 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! குழப்பம் நீங்கும் கன்னி ராசிக்கு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


