விஜயவாடா: வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி ஒன்று, மறுநாளே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றின் மூன்றாமாண்டு மாணவர் பட்டுல்லா சந்தீப் (22). இவர் அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பொறியியல் பயின்ற மாணவி போகிரெட்டி மவுனிகா(20) என்பவரைக் காதலித்தார்.
இவர்கள் காதலுக்கு இரு குடும்பத்தாரும் எதிர்ப்பு தெரிவித்ததால், காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதற்காக நேற்று வீட்டைவிட்டு வெளியேறினர். அவர்கள் விஜயவாடாவுக்கு சென்று திருமணம் செய்து கொள்ள உள்ளதாக நண்பர்களிடம் கூறியிருந்தனர்.
ஆனால் அவர்கள் இருவரின் சடலங்களானது பிரகாசம் மாவட்டத்தில் உள்ள வெட்டப்பலம் ரயில் நிலையத்திற்கு அருகே தணடவாளத்தில் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரது நண்பர்கள் தெரிவித்த தகவலின் படி, விஜயவாடாவில் இருவரும் நேற்று திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். ஆனால் அன்று இரவே தாங்கள் இறக்கப் போவதாக அவர்கள் இருவரும் நண்பர்களுக்கு அலைபேசியில் குறுந்தகவல் அனுப்பியுள்ளனர் என்பது தெரிய வந்தது.
திருமணத்திற்கு பிறகு பெற்றோரின் எதிர்ப்பை சமாளிக்க அஞ்சி அவர்கள் இந்த விபரீத முடிவினை எடுத்ததாகத் தெரிகிறது.
போலீசார் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜூன் 19-க்கு ஒத்திவைப்பு

கிணற்றில் குளித்த இளைஞா் வலிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு

எல்ஆா்ஜி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு 2 அடுக்கு பாதுகாப்பு

கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


