தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

காஷ்மீரீல் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: ஒருவர் சரண்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் அருகே பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்க பயங்கரவாதிகள் 2 பேர்

News image
Updated On :11 செப்டம்பர் 2017, 2:39 am

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் அருகே பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்க பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் அருகே உள்ள குத்வாணி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, இன்று அதிகாலையிலேயே அந்த கிராமத்தை முற்றுகையிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். சில மணி நேரம் நீடித்த துப்பாக்கி சண்டையில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 1 பயங்கரவாதி உயிருடன் பிடிபட்டுள்ளதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் தாவூத் அகமத் அலி மற்றும் ஷைஹார் அகமத் வாணி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பயங்கரவாதி ஹரிப் சோபி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும், அவர்களிடமிருந்து ஒரு ஏகே47, ஐஎன்எஸ்ஏஎஸ் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. வேறு பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனரா என்றும் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.