லக்னௌ: சமாஜ்வாதி கட்சியில் உண்டான குழப்பங்களுக்குப் பிறகு, ஏறக்குறைய ஒரு வருடத்திற்குப் பின் இன்று ஒரே மேடையில் முலாயம் யாதவ் மற்றும் அகிலேஷ் சிங் யாதவ் இருவரும் பங்கேற்றனர்.
சமாஜ்வாதி கட்சியில் ஒரு வருடத்திற்கு முன், அதன் அப்போதைய தலைவராக இருந்த முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது மகனும் அன்றைய உத்தரபிரதேச முதல்வருமான அகிலேஷ் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. முலாயமின் சகோதரரான ஷிவ்பால் யாதவுக்கும், அகிலேஷுக்கும் இடையே உண்டான அதிகார போட்டியே இதற்கு காரணமாக அமைந்தது. இதில் முலாயம் அவரது சகோதரரான ஷிவ்பால் யாதவுக்கு ஆதரவு தெரிவித்து, மகனையே எதிர்த்ததன் காரணமாக கட்சியில் பிளவு உண்டானது.
தேர்தல் ஆணையம் வரை சென்ற இந்த பிரச்சினையில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான அணியே உண்மையான கட்சி என்று தேர்தல் ஆணையம் தீர்மானித்து அதற்கு கட்சியின் பெயரும், சின்னமும் கிடைத்தது. அதன் பிறகு முலாயம் அவ்வளவாக எங்கும் வெளியே நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார்.
இந்நிலையில் புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதியான ராம் மனோகர் லோஹியாவின் 50-ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்த் நிகழ்வில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். நிகழ்வுக்கு ஒன்றாக ஒரே வாகனத்தில் வந்த அவர்கள் அங்கு கூடியிருந்த தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார்கள்.
பின்னர் இருவரும் ஒன்றாக லோஹியாவின் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
ஆனால் இந்த நிகழ்வில் ஷிவ்பால் யாதவ் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (25.04.2026) -சிம்மம்
இன்றைய ராசி பலன் (25.04.2026) - துலாம்

குழப்பம் நீங்கும் மகர ராசிக்கு: தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (25 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! குழப்பம் நீங்கும் கன்னி ராசிக்கு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


