பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

தில்லி விமான நிலையத்தில் பெண் பயணி-ஊழியர் மாறி மாறி 'பளார் பளார்'!   

தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட வாக்குவாதம் ஒன்றில், பெண் பயணி ஒருவரும், ஊழியர் ஒருவரும் மாறி மாறி அறைந்து கொண்ட பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

News image
Updated On :28 நவம்பர் 2017, 12:36 pm

புதுதில்லி: தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட வாக்குவாதம் ஒன்றில், பெண் பயணி ஒருவரும், பெண் ஊழியர் ஒருவரும் மாறி மாறி அறைந்து கொண்ட பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இது பற்றி விமான நிலைய காவல் கட்டுப்பாட்டு அறை சார்பாக அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:

இன்று அதிகாலை 04.55 மணியளவில் மூன்றாவது உள்நாட்டு முனையத்தின் சோதனைச் சாவடி ஒன்றில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக விமான நிலைய காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. அங்கு சென்று விசாரித்த போது, அஹமதாபாத் செல்ல வேண்டிய பெண் பயணி ஒருவரும், ஏர் இந்தியா நிறுவன பெண் ஊழியர் ஒருவரும் தகராறில் மாறி மாறி அறைந்து கொண்ட சம்பவம் தெரிய வந்தது.

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவினைச் சேர்ந்த அந்த பெண் பயணி அதிகாலை 05.00 மணிக்கு அஹமதாபாத் புறப்படும் ஏர் இந்தியா விமானத்தில் செல்ல வேண்டியவர். ஆனால் விமானம் ஏறுவதற்கு முன்பான வழக்கமான சோதனைகளுக்கு மிகவும் தாமதமாக 04.18 மணி அளவில் அவர் வந்துள்ளார்.

இதன் காரணமாக ஏர் இந்தியா நிறுவன பெண் ஊழியர் அவரை அனுமதிக்க மறுத்துள்ளார். இதன் காரணமாக இருவருக்குள்ளும் வாய்த் தகராறு எழுந்துள்ளது. விரைவில் அது கைகலப்பாக மாறியுள்ளது. அந்த பெண் பயணி ஊழியரை அறைய பதிலுக்கு அவரும் திரும்பி அறைந்திருக்கிறார்.

இவ்வாறுஅவர் தெரிவித்தார்.

பின்னர் இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 'பெண் பயணிக்கும் ஊழியருக்கு இடையேயான பிரச்னை சுமுகமாக தீர்க்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளது .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.