புதுதில்லி: தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசின் அளவைக் கட்டுப்படுத்தும் பொருட்டு மாநில அரசு கொண்டு வர உத்தேசித்திருந்த வாகன கட்டுப்பாட்டு திட்டத்துக்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளளது.
தில்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசின் அளவானது அபாயக் கட்டத்தினை நெருங்கி வருகிறது. இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.அதேபோல் தில்லி உயர் நீதிமன்றமும், தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் அதிகரித்து வரும் காற்று மாசினைக் கட்டுப்படுத்தும் பொருட்டு பல்வேறு ஆலோசனைகளையும், உத்தரவுகளையும் வழங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக தில்லியில் வரும் ஞாயிறு முதல் வாகனங்களின் பதிவெண் அடிப்படையிலான கட்டுப்பாட்டு திட்டத்தினைக் கொண்டு வர அம்மாநில அரசு உத்தேசித்திருந்தது.
இந்நிலையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயமானது இன்று ஒரு உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதன்படி மாநில அரசு கொண்டு வர உத்தேசித்திருந்த வாகன கட்டுப்பாட்டு திட்டத்துக்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளளது. இந்த திட்டத்தின் செயல்திறன் மற்றும் ஆக்கப் பூர்வ விளைவுகள் தீர்ப்பாயத்துக்கு திருப்தி ஏற்படும்படி நிரூபிக்கப்டாதவரை அதனை செயல்படுத்த அனுமதிக்க முடியாது என்றும் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

தோ்தல் பணியின்போது திமுக தொண்டா் மாரடைப்பால் மரணம்; அதிர்ச்சியில் தாயும் உயிரிழப்பு: சேலத்தில் சோகம்

யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!

வாக்களிப்பதற்காக சிவகங்கை சென்றவா் பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் மயங்கி விழுந்து பலி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


