பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களுக்கு ஆதார் இணைப்பு கட்டாயம்: உறுதிப்படுத்திய ஐஆர்டிஏ! 

இந்தியாவில் நடைமுறையில் உள்ள எல்லா ஆயுள் காப்பீட்டுத் திட்ட வாடிக்கையாளர்களும் தங்கள் பாலிசியுடன், தங்களது ஆதார் எண்னை இணைப்பது கட்டாயம் என்று இந்திய காப்பீட்டுத் திட்ட ஒழுங்கு முறை ...

News image
Updated On :9 நவம்பர் 2017, 12:23 pm

சென்னை: இந்தியாவில் நடைமுறையில் உள்ள எல்லா ஆயுள் காப்பீட்டுத் திட்ட வாடிக்கையாளர்களும் தங்கள் பாலிசியுடன், தங்களது ஆதார் எண்னை இணைப்பது கட்டாயம் என்று இந்திய காப்பீட்டுத் திட்ட ஒழுங்கு முறை மற்றும் வளர்ச்சி ஆணையம் (ஐஆர் டிஏ) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய காப்பீட்டுத் திட்ட ஒழுங்கு முறை மற்றும் வளர்ச்சி ஆணையம் (ஐஆர்டிஏ) இன்று வெளியிட்டுள்ள ஒரு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:

இந்தியாவில் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ள 'பணமோசடி தடுப்புச் சட்டம் - 2017 (ஆவணப் பராமரிப்பு) இரண்டாவது திருத்தத்தின் படி, உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களுக்கு எடுக்கப்பட்டு நடைமுறையில் உள்ள ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கு, பாலிசிதாரர்களின் ஆதார் எண்ணினை இணைப்பது கட்டாயமாக்கப்படுகிறது.

இதன்படி தற்பொழுதுள்ள பாலிசிகளுக்கான பணப்பயனை பெறுவதற்காக வாடிகையாளர்கள் தங்களுடைய ஆதார் எண், நிரந்தர கணக்கு எண் அல்லது பார்ம் 60 ஆகியவற்றை இணைப்பது கட்டாயமாகிறது.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் இதற்கு என இறுதித் தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை. அத்துடன் மோட்டார் வாகனங்களுக்கான ஆயுள் காப்பீடுகளுக்கு ஆதார் எண்ணினை இணைப்பது பெரும் தலைவலியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.