புதுதில்லி: அதிமுகவின் 11 எம்.எல் ஏக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கினை, உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரும் செம்மலையின் மனு நவம்பர் 13-இல் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
தமிழக முதலமைச்சர் எடபப்டி பழனிசாமி அரசு மீது கடந்த பிப்ரவரி மாதம் தமிழக சட்டப் பேரவையில் நமபிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்பொழுது அதிமுகவில் தனி அணியாக செயல்பட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையிலான 11 அதிமுக எம்.எல் ஏக்கள், கட்சிக் கொறடாவின் உத்தரவையும் மீறி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
இதனைத் தொடர்ந்து கட்சிக் கொறடா உத்தரவை மீறி வாக்களித்த அந்த 11 அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென்று குற்றம் சாட்டிய திமுக, அதிமுகவின் 11 எம்.எல் ஏக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
ஆனால் ஆந்திர சட்டப்பேரவை தொடர்பான இதே போன்றதொரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருப்பதால், இந்த வழக்கினையும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி, அதிமுக தலைவர் செம்மலை வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி செல்லமேஸ்வர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மனுதாரர் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகியின் வேண்டுகோளினை ஏற்று, நவம்பர் 13 அன்று விசாரணை நடைபெறும் என்று நீதிபதி அறிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

தோ்தல் பணியின்போது திமுக தொண்டா் மாரடைப்பால் மரணம்; அதிர்ச்சியில் தாயும் உயிரிழப்பு: சேலத்தில் சோகம்

யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!

வாக்களிப்பதற்காக சிவகங்கை சென்றவா் பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் மயங்கி விழுந்து பலி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


