பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

காங்கிரஸ் ஒரு நகைச்சுவை சங்கம்:  பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி 'காமெடி'!

காங்கிரஸ் ஒரு நகைச்சுவை சங்கம் போல் ஆகி விட்டது என்று ஹிமாச்சல் பிரதேச தேர்தல் பிரச்சார பேரணியில் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

News image
Updated On :2 நவம்பர் 2017, 7:56 am

கங்ரா (ஹிமாச்சல் பிரதேசம்): காங்கிரஸ் ஒரு நகைச்சுவை சங்கம் போல் ஆகி விட்டது என்று ஹிமாச்சல் பிரதேச தேர்தல் பிரச்சார பேரணியில் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

தற்பொழுது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ஹிமாச்சல் பிரதேசதுக்கு வரும் நவம்பர் 9-ஆம் தேதியன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு தேர்தல் பிரச்சாரத்தில் பங்கு பெறுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்துள்ளார். அவர் கங்ரா என்னும் இடத்தில் தனது முதல் பேரணியில் பங்கேற்றார். அப்பொழுது அவர் பேசியதாவது:

நாம் எல்லாரும் காங்கிரஸ் கட்சியினை இப்பொழுது கவனிக்க வேண்டும். அவர்களை நாம் பாராட்ட வேண்டும். அவர்களுக்கு எதுவுமே மிச்சம் இல்லை; நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் அவர்களது பிடியானது தளர்ந்து வருகிறது.

மக்கள் ஒவ்வொரு முறையும் தங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும் பொழுது மாற்றத்துக்குத்தான் வாக்களிக்கின்றனர்.  காங்கிரஸ் தற்பொழுது ஒரு நகைச்சுவை சங்கம் போல் ஆகி விட்டது.          

ஹிமாச்சல் பிரதேச முதல்வர் வீரபத்திர சிங் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது பற்றி தொடர்ந்து பேசுகிறார்.  ஆனால் அவரே ஊழல் வழக்கு ஒன்றில் ஜாமின் பெற்றுத்தான் தற்பொழுது வெளியே இருக்கிறார்.

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஊழலுக்கு எதிராக சகிப்புத்தன்மை இன்றி நடந்து கொள்வோம் என்று அவர் பேசுகிறார். ஆனால் அவர் பேச்சினை யாராவது நம்புவார்களா?

இவ்வாறு மோடி பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.