கர்நாடகத்தின் புகழ்பெற்ற நடிகராக விளங்கிய மறைந்த ராஜ்குமாரின் மனைவி பார்வதம்மா காலமாகியுள்ளார். அவருக்கு வயது 77.
பார்வதம்மா, கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார். அவரது நிலைமை கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது.
உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து பெங்களூரில் உள்ள எம்.எஸ்.ராமையா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததது. ஆனால், அவரது நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துவந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை 4.40 மணிக்கு பார்வதம்மா மரணமடைந்துள்ளார்.
பார்வதம்மாவின் இரண்டாவது மகன் ராகவேந்திர ராஜ்குமார் கூறும்போது, அம்மா இறக்கும்போது அவருடைய மூன்று மகன்களும் (சிவராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார், புனித் ராஜ்குமார்) உடன் இருந்தோம் என்று கூறினார். பார்வதம்மாவின் உடல் அவருடைய மகன் ராகவேந்திர ராஜ்குமாரின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமானோர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
இந்நிலையில் சமூகவலைத்தளத்தில் திரையுலகைச் சேர்ந்த பலரும் பார்வதம்மாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். விஜய்காந்த், அறிக்கை வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளைஞரின் தலையில் சிக்கிய 10 கிலோ பால் கேன்! 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அகற்றம்

பிளேயிங் லெவன் மாற்றத்தினால் தடுமாறும் சிஎஸ்கே..! மிகக் குறைந்த பவர்பிளே ரன்கள்!

தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது: மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

கற்றுக்கொள்ள சிறந்த தளம் மனதின் குரல் நிகழ்ச்சி! பாஜக தலைவர் பேச்சு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


