புதுதில்லி: ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இஸ்லாமிய பிரிவான 'முஸ்லீம் ராஷ்ட்ரிய மன்ச்' அமைப்பின் சார்பில், அயோத்தியில் இஸ்லாமியர்கள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியான 'இப்ஃதார்' நடத்தப்பட்டுள்ளது.
உத்தரப்பிரகேச மாநிலம் அயோத்தியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இஸ்லாமிய பிரிவான 'முஸ்லீம் ராஷ்ட்ரிய மன்ச்' என்னும் அமைப்பு செயல்படுகிறது.2002-ஆம் ஆண்டு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அப்போதைய தலைவரான கே.எஸ்.சுதர்ஷனின் முயற்சியால் இந்த அமைப்பு துவங்கப்பட்டது. ராமர் கோவில் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் இஸ்லாமியர்களுடன் இணைந்து செயல்பட இந்த அமைப்பானது துவங்கப்பட்டது.
இந்த அமைப்பின் சார்பில், புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியான 'இப்ஃதார்' நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவுக்கு அயோத்தியில் உள்ள முக்கியமான இஸ்லாமிய பிரமுகர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இது தொடர்பாக இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரும், 'முஸ்லீம் ராஷ்ட்ரிய மன்ச்' அமைப்பின் புரவலரான இந்திரேஷ் குமார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்த 'இப்ஃதார்' விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் தாங்கள் இனி மாட்டிறைச்சி உண்ணுவதில்லை என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அத்துடன் பசுவின் பாலானது உடலுக்கு ஆரோக்கியமானது என்றும்,. மருத்துவ குணங்கள் கொண்டது என்பதையும் அவர்கள் ஏற்றுக் கொண்டனர். அத்துடன் பசுக்களை வைத்து பராமரிப்பதில் உள்ள நியாயங்களையும் அவர்கள் உணர்ந்து கொண்டனர்.
இவ்வாறு இந்திரேஷ் குமார் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளைஞரின் தலையில் சிக்கிய 10 கிலோ பால் கேன்! 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அகற்றம்

பிளேயிங் லெவன் மாற்றத்தினால் தடுமாறும் சிஎஸ்கே..! மிகக் குறைந்த பவர்பிளே ரன்கள்!

தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது: மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

கற்றுக்கொள்ள சிறந்த தளம் மனதின் குரல் நிகழ்ச்சி! பாஜக தலைவர் பேச்சு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

