கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

அசாமில்  நான்கு இடங்களில் குண்டு வெடிப்பு!

இந்தியாவின் குடியரசு தினம் கொண்டாடப்படுகின்ற வேளையில் அசாம் மாநிலத்தில் நான்கு இடங்களில்குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:50 am

DIN

கவுகாத்தி: இந்தியாவின் குடியரசு தினம் கொண்டாடப்படுகின்ற வேளையில் அசாம் மாநிலத்தில் நான்கு இடங்களில்குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

அசாமின் தில்புருகர், தின்சுகியா மற்றும் சராய்தியோ ஆகிய மாவட்டங்களில் உள்ள நான்கு இடங்களில் இன்று ஒரே நேரத்தில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன.        

இது தொடர்பாக செய்தியாளர்களிடம்பேசிய காவல் துறை அதிகாரி ஒருவர், 'இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களினால் எந்த விதமான உயிர் இழப்போ,பொருள் சேதமோ ஏற்படவில்லை. உல்பா தீவிரவாதிகள் குண்டுகளை தனியான இடங்களில் வைத்துள்ளனர். தங்கள் இருப்பை காட்டுவதற்காகவும், அச்சமூட்டுவதற்கும் செய்யப்பட்ட நிகழ்வு இது' என்று தெரிவித்தார்.

முன்னதாக நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் குடியரசு தின கொண்டாட்டங்களை புறக்கணிக்குமாறு உல்பா தீவிரவாதிகள் கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.