புதுதில்லி: ராணுவ உயரதிகாரிகள் தங்களின் பூட்ஸ்களுக்கு பாலீஷ் போடச் சொல்லி வீரர்களை துன்புறுத்துவதாக மேலும் ஒரு ராணுவ வீரரின் புகார் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
சமூக வலைதளங்கள் மூலமாக தங்களது பிரச்சனைகளை ராணுவ வீரர்கள் பேசுவது தவறானது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பணிபுரியும் எல்லைப் பாதுகாப்பு படையின் 29-வது பட்டாலியனை சேர்ந்த தேத் பதூர் யாதவ் என்ற வீரர், எல்லை பாதுகாப்பு படையில் மோசமான உணவு வழங்கப்படுவதாகவும், சில நேரங்களில் வெறும் வயிற்றோடு படுக்க செல்வதாகவும் குற்றம்சாட்டியிருந்த வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், சமூக வலைதளங்கள் மூலமாக தங்களது பிரச்சனைகளை ராணுவ வீரர்கள் பேசுவது என்பது மிகவும் தவறானது என்று அவர்களது அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக துணை ராணுவத்தின் மூத்த கமாண்டே பிரசாத் கூறுகையில், சமூக வலை தளங்கள் மூலமாக பேசுவது ஆரோக்கியமானது அல்ல மற்றும் சரியானதும் அல்ல என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பணிபுரியும் இந்திய ராணுவத்தின் டேராடூன் 42-வது எல்லைப் பாதுகாப்பு படைப்பிரிவைச் சேர்ந்த லான்ஸ் நாயக் யாக்யா பிரதாப் சிங் வீரரின் குற்றச்சாட்டு வீடியோ செய்தி சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
வீரரின் குற்றச்சாட்டு வீடியோ காட்சியில், கடைநிலை வீரர்களை ராணுவ மேலதிகாரிகள் தங்களின் பூட்ஸ், காலணிகளுக்கு பாலீஷ் போட வேண்டும் என்று துன்புறுத்துவதாகவும், இதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் உச்சநீதிமன்றத்துக்கு கடந்த ஜூன் மாதம் பிரதாப் சிங் கடிதம் எழுதி இருந்தார்.
இந்த கடிதத்தின் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு டேராடூன் 42-வது படைப்பிரிவுக்கு பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பி இருந்தது.
அந்த கடிதத்தின்மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, தன்னை கொடுமைப்படுத்தி, தற்கொலை செய்துகொள்ளும் மனநிலைக்கு மேலதிகாரிகள் தொல்லை கொடுத்து வருவதாக தனது வீடியோ செய்தியில் லேன்ஸ் நாயக் யாக்யா பிரதாப் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
எந்த தவறும் செய்யாத தன்மீது ராணுவ நீதிமன்றம் விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் இதுவரை இரண்டு வீடியோ குற்றச்சாட்டுகள் வெளியாகி உள்ளன.
ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினருக்கு அளிக்கப்படும் ஊதியம் மற்றும் சலுகைகளை பெற லஞ்சம் பெறப்படுவதாக சிஆர்பிஎப் கான்ஸ்டபிள் ஒருவர் குற்றச்சாட்டிய வீடியோ பதிவு. ஜம்மூ-காஷ்மீர் எல்லையில் பனித் தட்பவெப்ப நிலையிலும் பாதுகாப்பு படையினருக்கு மோசமான தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும், சில நேரங்களில் வெறும் வயிற்றோடு படுக்க செல்வதாகவும் குற்றம்சாட்டியிருந்த வீடியோ புகார்.
படை வீரர்களுக்கு உணவு தயாரிப்பதற்காக வழங்கப்படும் பொருட்களை மேலதிகாரிகள் ஏமாற்றி வெளிச்சந்தையில் விற்பனை செய்வதாக அப்பகுதியை சேர்ந்த கிராமமக்கள் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடி
தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!

ரூ. 299 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்று ரூ. 1 லட்சத்தை இழந்த செவிலியர்!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


