புதுதில்லி: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் அமைச்சர் தயாநிதிமாறன் மேல் குற்றசாட்டு பதிவு செய்வது தொடர்பான மனு மீதான தீர்ப்பை ஜனவரி 17-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுகவைச் சேர்ந்த தயாநிதிமாறன் மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சராக இருந்த பொழுது பொழுது, ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு மிரட்டி குறைந்த விலைக்கு விற்க வைத்ததாகவும், அதற்கு பதிலாக அவர்கள் குடும்ப நிறுவனமான சன் குழுமத்தில் மேக்சிஸ் நிறுவனம் ரூ.742.58 கோடி ரூபாய் முதலீடு செய்ததாகவும் குற்றசாட்டு எழுந்தது.
இதனை விசாரித்த அமலாக்கத்துறை அதிகாரிகள் தயாநிதி மாறன் மட்டும் இல்லாது அவருடைய மனைவி, சகோதரர் கலாநிதி மாறன் மற்றும் நிறுவன உயர் அதிகாரிகள் மீதும் குற்றம் சாட்டியது. போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்தது.
சி.பி.ஐ நீதிமன்றத்தில் இவர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் கிரிமினல் சதித் திட்டம் தீட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றசாட்டு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் தயாநிதிமாறன் மீது குற்றசாட்டு பதிவு செய்வது தொடர்பான வழக்கில் மனு மீதான தீர்ப்பை ஜனவரி 17-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடி
தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!

ரூ. 299 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்று ரூ. 1 லட்சத்தை இழந்த செவிலியர்!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


