பெங்களூர்: பெங்களூரில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடந்த பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபர்களை, பாதிக்கப்பட்ட பெண் வாட்ஸ் அப் மூலம் அடையாளம் காட்டியுள்ளார்.
பெங்களூரில் புத்தாண்டை கொண்டாடிவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்த இளம் பெண்ணை, அங்கு வந்த இரண்டு இளைஞர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தினர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இது சமூக தளங்களில் வெளியானதை அடுத்து, தானாக முன்வந்து காவல்துறை நடவடிக்கை எடுத்தது.
விசாரணையில், சம்பவம் நடந்த கம்மனஹல்லி பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ஐயப்பா (19), லெனோ (20), சுதேஷ் (20), சோமஷேகர் (24) ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் 2 பேர் தேடப்பட்டு வருகிறார்.
அன்றைய தினம் குடித்துவிட்டு, சாலையில் 'ஹேப்பி நியூ இயர்' என்று கத்திக் கொண்டே சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண், தனது தோழியுடன் ஆட்டோவில் வருவதைப் பார்த்த இளைஞர்கள் அவரை பின்தொடர்ந்து வந்துள்ளனர்.
அவர் ஆட்டோவில் இருந்து இறங்கி வீட்டுக்குப் போகும் போது அவரிடம் தவறாக நடந்து கொண்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண், காவல்நிலையத்துக்கு வர அஞ்சுவதால், கைது செய்யப்பட்டவர்களின் புகைப்படங்கள் வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதில், குற்றவாளி ஐயப்பாவை, அப்பெண் அடையாளம் காண்பித்துள்ளார்.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேசி வருவதாகவும், அவரது அடையாளம் வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்வதாகவும், அவருக்கு பாதுகாப்பு அளிப்பதாகவும் உறுதி அளித்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தல் பணியில் ஈடுபட்ட ராமநாதபுரம் டிஎஸ்பி உயிரிழப்பு!

காமராஜா் ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும்: மூத்த வாக்காளா் விருப்பம்

அடிப்படை வசதிகள் இல்லை: மாற்றுத் திறனாளிகள் வேதனை

களம் சூடாக உள்ளது: மு.க. அழகிரி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


