புதுதில்லி: இரு பிரிவுகளாக பிரிந்து போராடும் சமாஜவாதி கட்சியின் 'சைக்கிள்' சின்னம் யாருக்கு எனபது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்தார்.
விரைவில் நடைபெறவிருக்கும் ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் சமாஜவாதி கட்சியின் சைக்கிள் சின்னம் யாருக்கு ஒதுக்கப்படும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்துப் பேசிய ஜைதி கூறியதாவது:
சமாஜவாதி கட்சியின் சின்னம் யாருக்கு ஒதுக்கப்படும் என்பது ஒரு ஊகத்தின் அடிப்படையிலான கேள்வி. இரு தரப்பும் தேர்தல் ஆணையத்திடம் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளன. அந்த ஆவணங்களை பரிசீலித்த பின் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
முன்னதாக தாங்கள்தான் உண்மையான சமாஜவாதி கட்சி என இரு பிரிவுகளாக பிரிந்து போராடும் முலாயம் சிங் மற்றும் அவரது மகனும் உத்தரபிரதேச முதல்வருமான அகிலேஷ் சிங் ஆகிய இரு தரப்பினரும் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை அடுத்தடுத்த நாட்களில் சந்தித்து மனு கொடுத்தனர் எனபது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress

சீனா, ரஷியா இணைந்து போரை முடிவுக்குக் கொண்டுவரும்: ஃபரூக் அப்துல்லா

ஈரான் தலைநகரில் நாளை முதல் மீண்டும் சர்வதேச விமானங்கள் இயக்கம்!

பலம் வாய்ந்த ஆர்சிபியுடன் மோதும் குஜராத்: சாய் கிஷோருக்கு வாய்ப்பு கிடைக்குமா?
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


