பட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

ராஜீவ் காந்திக்குப் பிறகு அயோத்தி மண்ணில் ராகுல்

பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ராகுல் காந்தி தான் அயோத்தி மண்ணில் முதல் முறையாக இன்று காலடி எடுத்து வைத்துள்ளார்.

News image
Updated On :9 செப்டம்பர் 2016, 7:31 am


புது தில்லி : பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ராகுல் காந்தி தான் அயோத்தி மண்ணில் முதல் முறையாக இன்று காலடி எடுத்து வைத்துள்ளார்.

1992ம் ஆண்டு அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அங்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.

1990ம் ஆண்டு நேரு-காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் என்ற அடிப்படையில் ராஜீவ் காந்தி அயோத்திக்குச் சென்றார். அவருக்குப் பிறகு, அதுவும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு வேறு யாருமே அயோத்திக்குச் செல்லவில்லை.

அயோத்திக்கு மிக அருகே உள்ள ஃபைஸாபாத்தில் பேரணி நடத்திய சோனியாவும், அயோத்தி செல்லவில்லை. பல முறை அயோத்திக்குச் சென்று பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்ட வருண் காந்தி பல காரணங்களால் அதனை தவிர்த்துவிட்டார்.

இந்த நிலையில், அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் இருந்து வெறும் 1கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஹனுமான்கர்ஹி கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார் ராகுல். இந்த பயணம் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.