ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில், இந்திய ராணுவத்தின் முக்கிய ரகசியங்கள் மற்றும் நடமாட்டம் குறித்த ரகசியங்களை உளவு பார்த்த பாகிஸ்தான் உளவாளி கைது செய்யப்பட்டான்.
கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளி தங்கியிருந்த இடத்தில்இருந்து இரண்டு பாகிஸ்தான் சிம் கார்டுகளும், வரைபடங்களும் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
ராணுவ புலனாய்வுத் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்,ஜம்மு மாவட்டத்தின் சங்கிலியா கிராமத்தில் தங்கியிருந்த போத் ராஜ் என்பவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் இருப்பதாகவும்,மிக முக்கிய ராணுவ ரகசியங்களை அவன் பாகிஸ்தானுக்கு தெரிவித்து வருவதாகவும் கூறப்பட்டது.
இதன் அடிப்படையில், சர்வதேச எல்லைப் பகுதிக்கு அருகே உள்ள ஜெர்தா கிராமத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித் திரிந்த போத் ராஜை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து கைது செய்ததாகவும், அப்போது அவன் தப்பிச் செல்ல முயன்றதாகவும் காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அவன் மீது சட்டத்துக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்ட குற்றத்துக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


