நல்லகண்ணு உடல்நிலை! விஜய் விசாரிப்பு!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

ஷீலா தீட்சித்தின் மருமகனுக்கு 2 நாள் போலீஸ் காவல்

தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் மருமகனை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

News image
Updated On :25 ஜனவரி 2024, 10:15 am

PTI


புது தில்லி: தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் மருமகனை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மனைவியின் சொத்துக்களை அபகரித்தல், முறைகேட்டில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஷீலா தீட்சித்தின் மகள், தனது கணவர் குடும்ப வன்முறையில் ஈடுபடுவதாகக் கூறி காவல்நிலையத்தில் அளித்த புகாரினைத் தொடர்ந்து நவம்பர் 11ம் தேதி சையது மொஹம்மது இம்ரான் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.

தில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இம்ரான், கைப்பற்றிய பொருட்களை பறிமுதல் செய்ய 2 நாள் போலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க தில்லி காவல்துறை அனுமதி கேட்டது.

இதனை ஏற்று தில்லி நீதிமன்ற நீதிபதி பங்கஜ் ஷர்மா, இம்ரானை நவம்பர் 17ம் தேதி வரை 2 நாட்கள் போலிஸ்காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.