சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

நாடு முழுவதும் ரூ.1.5 லட்சம் கோடி டெபாசிட்: இயல்பு நிலைக்கு திரும்பும் ஏடிஎம்கள்

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இதுவரை நாடு முழுவதும் ரூ.1.5 லட்சம் கோடி அளவுக்கு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 நவம்பர் 2016, 6:44 am


மும்பை: 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இதுவரை நாடு முழுவதும் ரூ.1.5 லட்சம் கோடி அளவுக்கு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ வங்கிகளில் மட்டும் ரூ.75,945 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாகவும், ரூ.3,753 கோடி அளவுக்கு பழைய பணத்தைக் கொடுத்து புதிய பணமாக பொதுமக்கள் மாற்றிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும் எஸ்பிஐ வங்கியில் ரூ.100 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் என ரூ.7,705 கோடி அளவுக்கு பணம் பொது மக்களால் பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், புதிய 500 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதை அடுத்து, விரைவில் அனைத்து ஏடிஎம்களும் செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.