திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

டாய்லட் அழுக்கு போகவில்லையா, நடிகர் மீது ரூ. 50 லட்சம் நஷ்டஈடு கேட்கலாம்

விளம்பரப் படங்களில் நடிக்கும் பிரபலங்களே அதன் நம்பகதன்மைக்கும் பொறுப்பேற்கும் வகையில் நுகர்வோர் சட்டங்கள் திருத்தப்படுகின்றன. இதன் மூலம் பிரபலங்கள் மீது ரூ. 50 லட்சம் வரை நஷ்ட ஈடு கோரலாம்.

News image
Updated On :17 மே 2016, 2:31 pm

புது தில்லி: விளம்பரப் படங்களில் நடிக்கும் பிரபலங்களே அதன் நம்பகதன்மைக்கும் பொறுப்பேற்கும் வகையில் நுகர்வோர் சட்டம் திருத்தப்படுகிறது.  இதன் மூலம் நுகர்வோர்கள், பிரபலங்கள் மீது ரூ. 50 லட்சம் வரை நஷ்ட ஈடு கோரி வழக்குத் தொடரலாம்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய, உணவு மற்றும் நுகர்பொருள் துறையின் அமைச்சர் ராமவிலாஸ் பாஸ்வான், மத்திய அரசு கொண்டுவரவிருக்கும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்- 2016-க்கு நாடாளுமன்றம் நிலைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது அமலில் இருக்கும் 1986 ஆண்டைய நுகர்வோர் சட்டத்துக்குப் பதில் இப்புதிய சட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்றார் பாஸ்வான்.

விளம்பரப் படங்களில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் பிரபலங்கள், தாங்கள் முன்னெடுக்கும் பொருள்களுக்கு கண்டிப்பாக பொறுப்பேற்க வேண்டும். தரமற்ற பொருள்களை ஏமாற்றி விளம்பரம் செய்தால், விளம்பரத்தில் நடிப்பவர்களிடமிருந்து ரூ. 50 லட்சம் வரை நஷ்டஈடு கோரலாம். மேலும் அவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.

புதிய சட்டத்தின்படி மாவட்ட நுகர்வோர் குறைதீர் மையங்கள் இனி ரூ. 1 கோடி வரையிலான புகார்களையும், மாநில நுகர்வோர் குறைதீர் மையங்கள் ரூ.14 கோடி வரையிலான புகார்களையும் விசாரிக்கலாம் என்றார் பாஸ்வான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.