ஆமதாபாத்: பிரதமர் மோடியின் கல்வித் தகுதி குறித்து சர்ச்சை நிலவி வரும் நிலையில் அவர் குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுநிலைப் பட்டம் பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், கடந்த 1978-ஆம் ஆண்டு தில்லி பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பு முடித்ததாகவும் 1983-ஆம் ஆண்டு குஜராத் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்ததாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், பிரதமரின் கல்வித் தகுதி குறித்து புகார்கள் எழுந்துள்ளதால், அவரது கல்வித் தகுதி குறித்த விவரங்களை வெளியிடக் கோரி, மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலுவுக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடிதம் எழுதினார். கேஜரிவால் கோரியுள்ள விவரங்களை அளிக்கும்படி, தில்லி பல்கலைக்கழகத்துக்கும், குஜராத் பல்கலைக்கழகத்துக்கும் மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, குஜராத் பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள தகவல்களின்படி, பிரதமர் நரேந்திர மோடி கடந்த 1983 ஆம் ஆண்டு அரசியல் அறிவியல் பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மோடி 800 மதிப்பெண்களுக்கு 499 மதிப்பெண்கள் எடுத்து 62.3 சதவீத தேர்ச்சியுடன் முதல் வகுப்பில் பட்டம் பெற்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமைதிப்பேச்சு! பாக். ராணுவத் தளபதியுடன் ஈரானிய வெளியுறவு அமைச்சர் சந்திப்பு!

ஒரிஜினல் எப்போதும் ஒரிஜினல்தான்! - கவிதாவின் பதிவும் பிஆர்எஸ்ஸின் பதிலும்

திருச்சி மாவட்டத்தில் வாக்களிக்கத் தவறியோர் 3.13 லட்சம் போ்!

2025-ல் பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


