பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

வங்கதேசத்தினர் அஸ்ஸாமுக்குள் ஊடுருவுவதை மத்திய அரசு தடுக்கும்: ராஜ்நாத் சிங்

வங்கதேசத்தினர் அஸ்ஸாம் மாநிலத்துக்குள் ஊடுருவுவதை தடுக்கும் வகையில், இந்திய - வங்கதேச எல்லையை மத்திய அரசு முழுவதுமாக மூடிவிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

News image
Updated On :30 மார்ச் 2016, 9:12 am

துலியாஜன்: வங்கதேசத்தினர் அஸ்ஸாம் மாநிலத்துக்குள்  ஊடுருவுவதை தடுக்கும் வகையில், இந்திய - வங்கதேச எல்லையை மத்திய அரசு முழுவதுமாக மூடிவிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

அஸ்ஸாம் மாநிலம் துலியாஜன் நகரில் இன்று நடைபெற்ற பாஜக தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், வங்கதேசத்தினர் இந்தியாவுக்குள் அத்துமீறி ஊடுருவுவது தொடர்கதையாகவே உள்ளது என்று கூறினார்.

தொடர்ந்து பேசுகையில், ஊடுருவலுக்கு காரணம் என்ன? அஸ்ஸாம் மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி ஊடுருவலை தடுத்து நிறுத்த இதுவரை முயற்சிக்காதது ஏன்? ஊடுருவல்காரர்கள் இந்தியாவுக்குள் நுழையப் பயன்படுத்தும் இந்திய - வங்கதேச எல்லையை ஏன் முழுவதுமாக அடைக்கவில்லை? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

மேலும், எல்லையை மூடுவது குறித்து அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். இந்திய- வங்கதேச எல்லையை முழுவதுமாக அடைத்துவிட்டால், ஊடுருவல்காரர்களால் இந்தியாவுக்குள் நுழைய முடியாது. இதை மத்திய அரசு விரைவில் செய்யும் என்றார் ராஜ்நாத் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.