பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராகுக: மல்லையாவுக்கு அருண் ஜேட்லி எச்சரிக்கை

நிலுவையைச் செலுத்தத் தவறினால், கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று விஜய் மல்லையாவுக்கு மத்திய நிதித்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News image
Updated On :28 மார்ச் 2016, 7:47 am

நிலுவையைச் செலுத்தத் தவறினால், கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று விஜய் மல்லையாவுக்கு மத்திய நிதித்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் இல்லை என்றால் வங்கிகளின் தரப்பிலும், விசாரணைக் கழகங்களும் எடுக்கும் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்று தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து பிடிஐக்கு அளித்த பேட்டியில் கூறிய அவர், தனிநபர் விவகாரம் குறித்து எந்த கருத்தையும் கூற தான் விரும்பவில்லை. ஆனால், இதுபோன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும், வங்கிகளில் இருக்கும் நிலுவைத் தொகையை சரியாக செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இல்லையென்றால், விஜய் மல்லையா செலுத்த வேண்டிய ரூ.9 ஆயிரம் கோடி கடனை வசூலிக்க வங்கிகள் மாற்று நடவடிக்கையை தேர்வு செய்ய வேண்டியிருக்கும்.

மல்லையாவின் சொத்து ஆவணங்கள் வங்கிகளிடம் உள்ளது. வங்கிகளும், இதர நிறுவனங்களும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து கடனை வசூலிக்கும் மாற்று ஏற்பாடுகளை, விசாரணை ஆணையத்திடம் இணைந்து ஆலோசனை நடத்தி வருகின்றன என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.