பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

மாயமான இந்தியர் கடைசியாக பிரஸ்ஸெல்ஸ் மெட்ரோ ரயிலில் இருந்து பேசியுள்ளார்: மத்திய அரசு

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸில் குண்டுவெடிப்பு தாக்குதலின் போது காணாமல் போன இன்போசிஸ் ஊழியர், கடைசியாக மெட்ரோ ரயிலில் இருந்து செல்போனில் பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :24 மார்ச் 2016, 11:03 am

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸில் குண்டுவெடிப்பு தாக்குதலின் போது காணாமல் போன இன்போசிஸ் ஊழியர், கடைசியாக மெட்ரோ ரயிலில் இருந்து செல்போனில் பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

பிரஸெல்ஸில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்த அன்று முதல் காணாமல் போன பெங்களுருவைச் சேர்ந்த இன்போசிஸ் ஊழியர் ராகவேந்திரன் கணேஷைத் தேடும் பணிகள் இந்திய தூதரகம் மூலம்  நடந்து வருகின்றன.

அதன்படி, அவர் கடைசியாக பிரஸ்ஸெல்ஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து செல்போனில் பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், "ராகவேந்திரான் கணேஷ் செல்போனில் பேசிய பதிவின் அடிப்படையில், அவர் கடைசியாக பிரஸ்ஸெல்ஸில் இருந்துள்ளார். அவர் மெட்ரோ ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த போது செல்போனில் பேசியிருப்பது தெரிய வந்துள்ளது.

ராகவேந்திரன் கணேஷைக் கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம் என்று கூறியுள்ளார்.

அதே போல, குண்டு வெடிப்பில் காயமடைந்த ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களான நிதி சபேகர் மற்றும் அமித் மோத்வானி இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வருவதாகவும் இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்ததாக சுஷ்மா கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.