பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானின் ரகசிய சுரங்கப்பாதை: பிஎஸ்எஃப் வீரர்கள் கண்டுபிடிப்பு

பாகிஸ்தானில் இருந்து ஜம்மு பகுதிக்குள் தீவிரவாதிகள் ஊடுருவும் வகையில் ஏற்படுத்தப்பட்டிருந்த ரகசிய சுரங்கப் பாதையை பிஎஸ்எஃப் வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

News image
Updated On :4 மார்ச் 2016, 9:07 am

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு பகுதியில், பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் ஊடுருவும் வகையில் ரகசிய சுரங்கப் பாதை ஒன்றை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பாகிஸ்தானில் இருந்து சுமார் 30 மீட்டர் தூரம் கொண்ட சுரங்கப் பாதை இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் ஊடுருவும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

மாதந்தோறும் இந்திய எல்லையில் வழக்கமான தூய்மைப்படுத்தும் பணி நடந்து வந்தது. அப்போதுதான், நன்கு வடிவமைக்கப்பட்ட ரகசிய சுரங்கப்பாதையை கண்டுபிடித்தோம் என்று ஜம்மு பகுதியின் எல்லைப் பாதுகாப்புப் படை ஆய்வாளர் ராகேஷ் ஷர்மா தெரிவித்தார்.

இந்த சுரங்கப்பாதை ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு தோண்டப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு பகுதிக்குள் தீவிரவாதிகள் ஊடுருவும் வகையில் இது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

துரித நேரத்தில் இந்த சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டதால் மிகப்பெரிய சதிச் செயல் தவிர்க்கப்பட்டுள்ளது. இல்லையென்றால், இந்த சுரங்கப்பாதை வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி நாச வேலையில் ஈடுபட வழி ஏற்பட்டிருக்கும் என்றும் ராகேஷ் ஷர்மா கூறினார்.

இந்திய எல்லைப் பகுதியில் இருக்கும் புற்களை அப்புறப்படுத்தும் பணியில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டதற்கு பாகிஸ்தான் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அதையும் மீறி எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டபோது தான் சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சுரங்கப்பாதை சுமார் 10 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் நீளம் 30 மீட்டர் தூரத்தில் இந்திய எல்லைக்குள் முடிகிறது.

எனினும், இந்த சுரங்கப்பாதைக்கு வெளியே வரும் வழி இன்னும் தோண்டப்படவில்லை. சுரங்கப்பாதை தோண்டும் பணி முடிவடையும் முன்பே அது கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. அந்த சுரங்கப்பாதை முடிவடையும் இடம் சரியாக இந்திய - பாகிஸ்தான் எல்லையில் அமைந்திருக்கும் தடுப்பு வேலைக்கு அருகே முடிகிறது.

அந்த சுரங்கம் வழியாக ஒருவர் தவழ்ந்து எளிதாக வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டில் இருந்து ஜம்மு பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்த 4வது சுரங்கப்பாதை இதுவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.