'பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கு காலவரையறை ஏதும் நிர்ணயம் செய்யப்படவில்லை'
இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டுவருவதற்கு காலவரையறை ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என மத்திய சட்ட அமைச்சர் சதானந்த கௌட கூறினார்.


இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டுவருவதற்கு காலவரையறை ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என மத்திய சட்ட அமைச்சர் சதானந்த கௌட கூறினார்.
இதுதொடர்பாக மக்களவையில் அவர் எழுத்து மூலம் அளித்த பதில்:
அரசியல் சாசனத்தின் 44-வது பிரிவு நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டுவருவதற்கு வழிவகை செய்கிறது. இதுதொடர்பாக கோரிக்கை மனுக்கள் அரசுக்கு வரப்பெற்றுள்ளன.
எனினும், பொது சிவில் சட்டம் என்பது முக்கியமான விஷயம் என்பதாலும் உணர்ச்சிபூர்வமானது என்பதாலும் அரசு அவசரப்பட்டு முடிவு ஏதும் எடுக்க விரும்பவில்லை. இதுதொடர்பாக அனைத்து தரப்பினருடனும் விரிவான ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது.
பொது சிவில் சட்டத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்றுவதற்கு அரசு காலநிர்ணயம் ஏதும் செய்யவில்லை என்றார் அமைச்சர்.
எனினும், பொது சிவில் சட்டம் தொடர்பான ஆலோசனை ஏதும் தொடங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அமைச்சர் விளக்கம் அளிக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...