பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பி.எப். மீதான வரி: எதிர்ப்பு காரணமாக அரசு புதிய விளக்கம்

பி.எப் திட்டத்தின் கீழ் பணத்தை திரும்ப பெறும்போது, 60 சதவீத பணத்துக்கு வரி விதிக்கப்படும் என மத்திய நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திரும்ப பெறும் பணத்தின் மீதான வட்டிக்கு மட்டுமே வரி விதிக்கப்படும் என அரசு இன்று விளக்கம் அளித்துள்ளது.

News image
Updated On :1 மார்ச் 2016, 9:36 am

பி.எப் திட்டத்தின் கீழ் பணத்தை திரும்ப பெறும்போது, 60 சதவீத பணத்துக்கு வரி விதிக்கப்படும் என மத்திய நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திரும்ப பெறும் பணத்தின் மீதான வட்டிக்கு மட்டுமே வரி விதிக்கப்படும் என அரசு இன்று விளக்கம் அளித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதிக்கு முன்பாக திரும்ப பெறப்படும் அனைத்து பி.எப். முதலீடுகள் மீது எவ்விதமான வரியும் விதிக்கப்படமாட்டாது. மேலும், இதற்கு பிறகு திரும்பப் பெறப்படும் பி.எப். முதலீடுகளுக்கும் எவ்விதமாக வரியும் விதிக்கப்படமாட்டாது.

ஈ.பி.எப். திட்டத்தில், 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதிக்குப் பின் முதலீடு செய்யப்படும் பணம், திரும்பப் பெறும்போது, அப்பணத்துக்கான வட்டிக்கு மட்டுமே வரி விதிக்கப்படும் என நிதித்துறை செயலர் கேஷ்முக் ஆதியா பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் 3.7 கோடி வாடிக்கையாளர்கள்  உள்ளனர்.

இதேபோல பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎப்) முதலீடு திட்டத்திலும் எவ்வித மாற்றமும் இல்லை. இத்திட்டத்தில் பணம் முதலீட்டுக்கும், திரும்ப பெறுவதற்கும், முதலீடு மீதான வட்டிக்கும் வரி ஏதும் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.