மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

போபால் நீதிமன்றத்தில் ஆஜரானார் திக் விஜய் சிங்

மத்தியப் பிரதேச முதல்வராக இருந்த போது ஊழலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங்கை இன்று போபால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:38 pm

PTI

மத்தியப் பிரதேச முதல்வராக இருந்த போது ஊழலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங்கை இன்று போபால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

மத்தியப் பிரதேச தலைமைச் செயலக ஊழியர்களுக்கான தேர்வில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில், வழக்குத் தொடர்பாக குற்றப்பத்திரிகை நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த குற்றப்பத்திரிகையில், ஊழல் நடந்த போது மத்தியப் பிரதேச முதல்வராக இருந்த திக்விஜய் சிங்கின் பெயரும் இடம்பெற்றுள்ளதால், அவரை பிணையில் வெளியே வர முடியாத பிரிவுகளில் கைது செய்ய சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

திக் விஜய் சிங் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால், அவரை நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு உட்பட்டு கைது செய்ய மத்தியப் பிரதேச காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், அவர் இன்று போபால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.